iPhone 16eக்கு போட்டியாக Google Pixel 9a அறிமுகம்
அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக Google Pixel 9a இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது.
iPhone 16eக்கு நேரடி போட்டியாக வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன், பிரீமியம் வகையில் சிறந்த அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Google Pixel 9a இந்தியாவில் 8GB RAM + 256GB Storage கொண்ட ஒரே மொடலில் கிடைக்கிறது.
இது Iris, Obsidian, Peony, Porcelain போன்ற பல கண்கவர் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் அதன் துவக்க விலை ரூ.49,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.3,000 வரை கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும்.
iPhone 16eக்கு கடுமையான போட்டி
iPhone 16e 128GB மொடல் ரூ.59,900 மற்றும் 256GB மாடல் ரூ.69,900 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலையை ஒப்பிடுகையில், Pixel 9a 256GB மொடல் iPhone 16eவைக் காட்டிலும் ரூ.20,000 குறைவாக கிடைக்கிறது. இது Apple ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கும் புதிய மாற்றாக அமையலாம்.
Pixel 9a முக்கிய அம்சங்கள்
- 6.3-InchPOLED Display (120Hz Refresh Rate, 2700 Nits Brightness)
- Google Tensor G4 Chipset, 8GB RAM + 256GB Storage
- 48MP + 13MP Dual Camera, 13MP selfie Camera
- 5100mAh பேட்டரி (23W Fast Charging)
இந்த புதிய Pixel 9a, இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய திருப்பமாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |