பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டம்: கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் ஸ்மார்ட்போன்
இணைய வழி தேடலில் முதன்மை தளமான கூகுள், தற்போது பிக்சல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
இதுவரை வெளியான அனைத்து கூகுள் பிக்சல் போன்களும், ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதுடன் தனக்கான பிரத்யேகமான வாடிக்கையாளர்களையும் ஈர்க்க தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் சீன ஒப்பந்த தயாரிப்பாளர்களின் உதவியோடு தற்போது தங்களது ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்களது உற்பத்தியை சீனாவிற்கு வெளியேயும் விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் உற்பத்தி
அந்த வகையில் பிக்சல் போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்து கூகுள் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
அதனடிப்படையில் இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவற்றை தங்களது சப்ளையர்களாக தேர்ந்தெடுத்து உற்பத்தியை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்தியாவின் லாவா, டிக்ஸான், பாரத் F.I.H ஆகிய நிறுவனங்களுடன் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |