Google-ன் புதிய Work From Anywhere விதிமுறை., கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
Google நிறுவனம், கோவிட் காலத்தில் அறிமுகப்படுத்திய “Work From Anywhere” (WFA) கொள்கையில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், ஊழியர்கள் இனிமேல் வீட்டிலிருந்தோ அல்லது வேறு மாநிலம்/நாட்டிலுள்ள Google அலுவலகங்களிலிருந்தோ வேலை செய்ய முடியாது.
இந்த புதிய விதிமுறைகள் 2025 கோடைகாலத்தில் அமுலுக்கு வந்துள்ளன.
முன்னதாக, ஊழியர்கள் ஆண்டுக்கு நான்கு வாரங்கள் வரை தங்கள் அலுவலகம் தவிர வேறு இடங்களில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் தற்போது, ஒரு வாரத்தில் ஒரு நாள் WFA பயன்படுத்தினாலும், முழு வாரமும் கழிக்கப்படும் என Google-ன் உள்நடப்பு ஆவணம் தெரிவிக்கிறது.
இது, WFA-யை Work From Home-க்கு மாற்றாக பயன்படுத்த முடியாது என்பதைக் உறுதி செய்கிறது.
மேலும், Google அலுவலகங்கள் உள்ள வேறு மாநிலங்கள் அல்லது நாடுகளில் WFA காலத்தில் வேலை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான காரணமாக, “சட்ட மற்றும் நிதி சிக்கல்கள்” என Google விளக்கமளித்துள்ளது.
அதேபோல், WFA-யை பயன்படுத்தும் ஊழியர்கள், தங்கள் இருப்பிட நேரத்திற்கேற்ப வேலை நேரத்தை பின்பற்ற வேண்டும்.
Google நிருவத்தின் துணைத் தலைவர் John Casey, இந்த மாற்றம் தொற்றுநோய் காலத்தில் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட கொள்கையின் உண்மையான நோக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாக கூறியுள்ளார்.
ஆனால், வேலைவாய்ப்பு சட்ட நிபுணர்கள், இந்த மாற்றம் ஊழியர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்றும், திறமையான பணியாளர்கள் வேறு நிறுவனங்களை தேடலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |