அரசாங்க App-களுக்கு லேபிளிங் முறை., Play Store-ல் அமுல்படுத்தும் Google
போலியான செயலிகளை சரிபார்க்க, மத்திய மற்றும் மாநில அரசு செயலிகளுக்கு பேட்ஜ்களின் லேபிளிங் முறையை அமுல்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்துள்ள நிலையில், இணைய மோசடி செய்பவர்கள் அப்பாவிகளை ஏமாற்றி வருகின்றனர்.
குறிப்பாக அரசு துறைகளின் சேவைகள் தொடர்பாக சைபர் மோசடி செய்பவர்கள் அந்த துறைகளின் ஆப்களுக்கு இணையான ஆப்களை தயாரித்து Google Play Store-ல் சேர்த்து வருகின்றனர்.
இந்த ஆப்ஸ் மூலம் சேவைகளை பெற அரசு துறைகளுக்கு இணையான ஆப்களை டவுன்லோடு செய்து பலர் ஏமாந்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு அரசு பயன்பாடுகளுக்கு லேபிள்களைப் பயன்படுத்த Google தயாராக உள்ளது.
X தளத்தில் ப்ளூ டிக் வாங்க முடியும்.அதேபோல், கிரே டிக் இருந்தால் அரசு கணக்கு என எளிதாக அடையாளம் காணமுடியும். இதன் மூலம், அதே பெயரில் போலி கணக்குகளை நடத்துபவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
இதே பாணியில், கூகுள் பிளே ஸ்டோர் ஒரு லேபிளைக் கொண்டு வந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு செயலிகளுக்கு கூகுள் ப்ளே ஸ்டோர் Label Vision வழங்கப்படுகிறது.
இந்த லேபிளைக் கிளிக் செய்வதன் மூலம் உண்மையான செயலியை உறுதிப்படுத்த, 'Verified' என்பதைக் காட்டும் பாப்-அப் திறக்கும்.
சான்றளிக்கப்பட்ட செயலிகளுக்கான பேட்ஜ்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு மற்றும் டெவலப்பர்களுடன் இணைந்து பணியாற்றியதை கூகுள் வெளிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Google, Google Play Store, official government apps label