அலார்ட்..! நம்மை பிறர் கண்காணிக்க உதவும் நவீன கருவி..கூகுள் கொடுத்த அசத்தலான தீர்வு
ஆப்பிள் ஏர்டெக்ஸ் (Apple Airtag) எனும் கருவி மூலம் கண்காணிக்கப்படுவதற்கு ஆப்பிள் நிறுவனம் கூகுளுடன் இணைந்து தீர்வு கண்டுள்ளது.
கண்காணிக்க உதவும் சிறிய கருவி
பயனர்கள் பாதுகாப்பிற்காக கூகுள் நிறுவனம் புதிய வசதிகளையும், செயலி மேம்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பயனர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தவறான ஆப்பிள் ஏர்டேக்கை கண்டறிய கூகுள் தீர்வு கண்டுள்ளது.
ஆப்பிள் ஏர்டேக் எனும் சிறிய கருவி மூலம் நீங்கள் செல்லும் பாதையை கண்காணிக்க முடியும். இந்த கருவியை எந்த பொருளிலும் ஓட்ட வைக்க முடியும் என்பதால், உங்கள் பை அல்லது வாகனத்தில் மறைவான பகுதிகளில் வைத்து விட்டால் எளிதாக உங்களை கண்காணிக்க முடியும்.
கூகுளின் தீர்வு
தற்போது ஆப்பிள் ஏர்டேக் மோசடி வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காண ஆப்பிள் நிறுவனம் கூகுளுடன் இணைந்து ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதன்படி தேவையில்லாமல் நம்மை ஒருவர் கண்காணிப்பதைத் தடுக்க முடியும். எப்படி என்றால், கூகுள் வழங்கும் புதிய அப்டேட் மூலம் அருகில் ஏதாவது ஆப்பிள் ஏர்டேக் இருந்தால், உங்கள் மொபைல் போனிற்கு Notification வந்துவிடும்.
ஆனால், இந்த பாதுகாப்பு சேவையை பெற வேண்டும் என்றால், பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு 6.0 பதிப்பிற்கு பிந்தைய வெர்ஷன்களில் இயக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் சில Settings-யை Activate செய்ய வேண்டும்.
Jaap Arriens/NurPhoto via Getty Images
கண்காணிப்பு கருவிகளை கண்டறியும் முறை
- இதேபோல் தேவையில்லாத கண்காணிப்பு கருவிகளை (Unknown Tracking Devices) கண்டறிய மேற்கொள்ள வேண்டிய அமைப்பு மாற்றங்கள் எவை என இங்கு காண்போம்.
- Settingsக்கு சென்று ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு இருக்கும்பட்சத்தில் 'Safety and Emergency' என்பதை Click செய்ய வேண்டும்.
- Android 11 மற்றும் அதற்கு முந்தையப் பதிப்பில் 'Personal Safety' என்பதை Click செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்யும்போது நீங்கள் 'Unknown Tracker Alerts' என்ற Optionஐ காண்பீர்கள். அதை Click செய்து 'Allow Alerts' என்ற அனுமதியை வழங்க வேண்டும்.
- இந்த சேவை Activate செய்யப்பட்டு, ஏதேனும் Trackers உங்கள் அருகில் இருந்தால், ஸ்மார்ட்போனின் சிக்னல் அனுப்பப்படும்.
- இது மட்டுமல்லாமல், இதுவரை அந்த Tracker-யில் சேகரிக்கப்பட்ட உங்களின் பயண விவரங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொண்டு, அதனை நிரந்தரமாக நீக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
இந்த சேவை தற்போது Airtag கருவிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |