கிரிப்டோகரன்சியில் பல லட்சத்தை இழந்த கூகிள் பொறியாளர்: அவர் கூறும் விளக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கூகிள் பொறியாளர் ஒருவர் கிரிப்டோ முதலீடில் சிக்கி சுமார் 67 லட்சம் ரூபாய் அளவுக்கு இழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பங்குச்சந்தையில் முதலீடு
கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்சு மாவட்டத்தில் குடியிருப்பவர் 22 வயதான ஈதன் ங்குன்லி. இளம் வயதிலேயே பெற்றோரின் உதவியுடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருபவர்.
35 வயதில் ஓய்வை அறிவிக்கும் முடிவுடன் இருக்கும் இவர், தற்போது இரண்டு குடியிருப்புகள், 1 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தை முதலீடு என கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் நவம்பர் 2021 முதல் ஜூன் 2022 வரையில் சுமார் 67 லட்சம் வரையில் கிரிப்டோவில் இழந்ததாக தெரிவித்துள்ளார். தமது முதலீடு தொகையில் 24 லட்சத்தையும் லாபம் ஈட்டியதில் இருந்து ரூ. 41 லட்சம் தொகையும் இழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தமது இழப்பு ஈடுசெய்ய முடியும்
பிட்காயின் மற்றும் Ethereum காயினில் சுமார் 33 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறும் ஈதன், பிட்காயின் மதிப்பு சரிவடைந்ததும் margin முறைப்படி 12 லட்சத்திற்கு மேலதிகமாக பிட்காயின் வாங்கியுள்ளார்.
மொத்தமாக ரூ. 42 லட்சம் தொகைக்கு தம்மிடம் பிட்காயின் இருந்ததாகவும், ஆனால் 2022ல் பிட்காயின் மதிப்பு 70 சதவீதம் சரிவடைய, தமக்கு பேரிழப்பு ஏற்பட்டதாகவும் 22 வயதான ஈதன் ங்குன்லி தெரிவித்துள்ளார்.
ஆனால் பிட்காயின் மதிப்பு மீண்டும் உயரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதனால் தமது இழப்பு ஈடுசெய்ய முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |