செயல்படாத கணக்குகளை நீக்கும் கூகுள்: உங்கள் கணக்கை பாதுகாப்பது எப்படி?
செயல்படாத கணக்குகளை Google நீக்கவதாக அறிவித்துள்ள நிலையில், உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
செயல்படாத கணக்குகள்- Google நடவடிக்கை
குறைந்தது இரண்டு வருடங்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லாமல் காணப்படும் Google Workspace (Gmail, Docs, Drive, Meet மற்றும் Calendar), YouTube மற்றும் Google Photos உள்ளிட்ட செயலற்ற கூகுள் கணக்குகளை நீக்குவதற்கு Google நடவடிக்கை எடுத்துள்ளது.
கூகுள் பயனர்கள் தங்களது பல தேவைகளுக்கு ஏற்ப ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாம். அவற்றில் சில கணக்குகள் இப்பத்து தேவை என்றாலும், அடிக்கடி திறந்து பார்த்துகொள்வது என்பது சில சமயங்களில் சாத்தியமில்லாமல் போகலாம்.
Photo Credit: Reuters
ஆனால், அவ்வாறு ஏதேனும் கணக்குகளை 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதனை பயனற்ற அல்லது தேவையற்றதாக நினைத்து கூகுள் அவற்றை நீக்கிவிட திட்டமிட்டுள்ளது.
Inactive Account Manager
இப்படி ஒரு சூழலில், Google-ன் Inactive Account Manager, பயனர்கள் தங்கள் கணக்கை குறிப்பிட்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் வைத்திருந்தால் அவர்களுக்குத் தெரிவிக்க அனுமதிக்கிறது.
Google Inactive Account Manager-ஐ எவ்வாறு அமைப்பது? அதனை படிப்படியாக இங்கே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
படி 1: உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.
படி 2: data & privacy settings மெனுவிற்குச் சென்று 'Inactive Account Manager' என்பதைத் தேடவும்.
படி 3: 'after 3 months of activity' விருப்பத்தைத் தவிர விரும்பிய காத்திருப்பு காலத்தை உள்ளிடவும்.
(Photo Illustration by Rafael Henrique/SOPA Images/LightRocket via Getty Images)
படி 4: தொடர்பு விவரங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவும்.
படி 5: 'யாருக்கு அறிவிக்க வேண்டும், எதைப் பகிர வேண்டும் என்பதைத் தேர்வுசெய்க' விருப்பத்தின் கீழ் நம்பகமான தொடர்பைச் சேர்த்து, நம்பகமான தொடர்பைத் (trusted contact) தெரிவிக்கவும். உங்கள் Google கணக்கின் வெவ்வேறு பகுதிகளை அணுக, 10 நம்பகமான தொடர்புகளை (trusted contact) நீங்கள் தேர்வுசெய்யலாம்.
படி 6: 'decide if your inactive Google account should be deleted' விருப்பத்தில், உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, திட்டத்தை மதிப்பாய்வு செய்ய கிளிக் செய்யவும்.
படி 7: உங்கள் நம்பகமான தொடர்பு உங்கள் தரவு நீக்கப்படுவதற்கு முன்பு பதிவிறக்கம் செய்ய மூன்று மாதங்கள் ஆகும்.
படி 8: பின்னர் Confirm-ஐ தட்டி அமைப்பை உறுதிசெய்யவும்.
குறிப்பு:- 'manage your plan' என்ற தலைப்பின் கீழ் நீங்கள் எந்த நேரத்திலும் திட்டத்தை முடக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.