கூகுளின் புதிய TranslateGemma - 55 மொழிகளில் மொழிபெயர்ப்பு திறன்
Google, புதிய TranslateGemma எனப்படும் திறந்த Open Translate Models-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை 55 மொழிகளை ஆதரிக்கின்றன மற்றும் 4B, 12B, 27B parameters என மூன்று அளவுகளில் கிடைக்கின்றன.
இந்த மொடல்கள், Gemini உருவாக்கிய தரவுகள் மற்றும் மனித மொழிபெயர்ப்புகளின் கலவையை அடிப்படையாகக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.
மேலும், reinforcement learning முறைகள் மூலம் மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, 12B மொடல், Google-ன் 27B baseline-ஐ விட குறைந்த computing power-இல் அதிக செயல்திறன் வழங்குகிறது. இதனால், லேப்டாப்பில் cloud API-களைப் பயன்படுத்தாமல் நேரடியாக தரமான மொழிபெயர்ப்பு செய்ய முடியும். அதேபோல், 4B மொடல் ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
TranslateGemma, multimodal திறன்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம், படங்களுக்குள் உள்ள உரைகளை மொழிபெயர்க்கும் வசதி கிடைக்கிறது.
உதாரணமாக, சாலை குறியீடுகள், உணவுப் பட்டியல், ஆவணப் புகைப்படங்கள் போன்றவற்றை நேரடியாக மொழிபெயர்க்க முடியும்.
இந்த மொடல்கள் தற்போது Kaggle மற்றும் Hugging Face-இல் கிடைக்கின்றன. Google, TranslateGemma-வை உலகளாவிய டெவலப்பர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான திறந்த மூல கருவியாக வழங்கியுள்ளது.
TranslateGemma, AI அடிப்படையிலான மொழிபெயர்ப்பில் புதிய தரத்தை அமைத்து, உலகளாவிய மொழி தடைகளை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |