முடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பு வரை: காட்டு நெல்லியின் அற்புத நன்மைகள்
முடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பு வரை எண்ணிலடங்கா அற்புத நன்மைகளை கொண்டுள்ள கனி தான் காட்டு நெல்லி.
காட்டு நெல்லி
அனைத்து பருவத்திலும் மக்கள் சாப்பிட வேண்டிய மற்றும் உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை வழங்க கூடிய கனி என்றால் அது காட்டு நெல்லி தான்.
இந்த காட்டு நெல்லி அல்லது பெரிய நெல்லியில், வைட்டமின்கள்,கனிமங்கள்,நார்ச்சத்து,ஃபீனால்கள் மற்றும் பிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் என மனித உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
Getty Image/ Shutterstock
இத்தகைய ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய நெல்லிக்கனியை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம், நமது உடலை சமச்சீராக வைத்து கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடியும்.
தோல் பராமரிப்பு
காட்டு நெல்லி நமது சருமத்தை இயற்கையான முறையில் பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
நெல்லிக்கனியில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள், நாம் எப்போதும் இளமையாக இருக்க உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு
காட்டு நெல்லியில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
இதில் அந்தோசயினின்கள், ஃபிளாவனாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதய பாதுகாப்பு
நெல்லிக்காய் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. அத்துடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
Shutterstock
இரத்த சர்க்கரை அளவு
நெல்லிக்காயில் உள்ள எலாகிடானின்கள் சேர்மங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும் முளை செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Nelli, kaattu Nelli, big Nelli, gooseberry, Hair Growth, Skin Care, Diabetes, blood Sugar, cancer, heart goodness