இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO யார் தெரியுமா? அவரின் ஊதியம் இத்தனை கோடிகளா..!
இந்தியாவில் உள்ள CEO-களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் CEO தியரி டெலாபோர்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
அதிக சம்பளம் வாங்கும் CEO
மும்பை பங்குச் சந்தையை கொண்டு முன்னணி 500 நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) யார் என்பதை வெளியிட்டுள்ளது.
இதில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை ஐடி நிறுவனத்தின்(IT sector) சிஇஓ-க்கள் பெற்றுள்ளனர்.
Pixabay
இதற்கு மற்ற துறை நிறுவனங்களை விட ஐடி நிறுவனங்கள் நேரடியாக உலக சந்தையுடன் போட்டி போடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
முதலிடம் பிடித்த விப்ரோ சிஇஓ
இந்த தரவரிசையின் அடிப்படையில் 2023ம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய CEO-களில் விப்ரோ(Wipro) நிறுவனத்தின் CEO தியரி டெலாபோர்ட்(Thierry Delaporte) முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் ஆண்டு சம்பளமாக மட்டும் சுமார் ₹ 82 கோடி வரை பெற்றுகிறார். அவரை தொடர்ந்து இன்போசிஸ்(Infosys) CEO சலிப் பரேக் ₹ 56.45 கோடி ரூபாய், டெக் மஹிந்திரா(Tech Mahindra) CEO சிப் குர்னானி ₹ 30 கோடி, என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Money, Highest Paid CEO, Wipro, Infosys< Tech Mahindra, CEO, TCS, Thierry Delaporte, Economic Times