முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சத்தான நெல்லிக்காய் சட்னி- எப்படி செய்வது?
நெல்லிக்காய் ஆனது இயற்கையாகவே உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், எடையை குறைக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், உடலிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் சத்தான நெல்லிக்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய்- 5
- தேங்காய் துருவல்- சிறிதளவு
- பூண்டு பல்- 3
- சின்ன வெங்காயம்- 5
- பச்சை மிளகாய்- 2
- காய்ந்த மிளகாய்- 3
- பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் நெல்லிக்காயை கழுவி சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், மிளகாய் வத்தல், பூண்டு, உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டினால் போதும்.
சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் சட்னி ரெடி தயார்.
இதனை இட்லி, தோசை என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |