விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இருக்கும் இரண்டாவது இந்தியர்.., யார் அவர்?
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சுற்றுலா பயணியாக விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், விஜயவாடாவில் பிறந்தவர் கோபி தொடக்குரா (Gopi Thotakura). 30 வயதாகும் இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அங்கு அட்லாண்டா நகரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெஃபர்ட்-25 (Blue Origin's New Shephard-25 ) திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்வதற்கு தேர்வாகியுள்ளார். இவருடன் சேர்ந்து 5 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இருக்கின்றனர்.
ஏரோநாட்டிகல் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள கோபி தொடக்குரா, விமானத்தை இயக்குவதற்கும் பயிற்சி பெற்றுள்ளார். இதனால் தான் விண்வெளிக்கு பயணம் செய்வதற்கு தேர்வாகியுள்ளார்.
இவர், எப்போது விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ளார் என்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்திய விமானப்படையின் முன்னாள் விமானியான விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா, 1984 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |