சீனாவுக்கு போகலாம்னு நினைக்கிறேன்.., ஆக்கிரமிப்பு குறித்து சாடிய சீமான்
அருணாச்சல பிரதேசம் சென்று, சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளுக்கு 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சீமான் பரப்புரை
இந்நிலையில் ஆரணி மக்களவை தொகுதி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த சீமான், "தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து வரி வசூலிக்கிறார்கள். அதோடு, வாகனம் வாங்கும் போதும் வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை வைத்து சாலை அமைக்க வேண்டியதுதானே.
சாலையை கூறு போட்டவர்கள் நாட்டையும் கண்டிப்பாக கூறு போடுவார்கள். சலுகை, போனஸ், மானியம், இலவசம் இதை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. ரூ.1000 -க்கு கையேந்த வைப்பது தான் திராவிட மொடலின் சாதனை.
அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்த சீனா, பெயர் பலகையை சீன மொழியில் வைத்துவிட்டது. அங்கு இருப்பவர்கள் சீனாவுக்கு செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. நான் அருணாச்சல பிரதேசம் சென்று, அங்கிருந்து சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |