பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் எதற்கு? குடிக்கும் மக்களுக்கு இலவசம் எதற்கு? சீமானின் சர்ச்சை பேச்சு
குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளுக்கு 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சீமான் பிரச்சாரம்
இந்நிலையில் சேலம் பரப்புரையில் சீமான் பேசுகையில், "பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுப்பது தேர்தல் அரசியல். ஆகச் சிறந்த கல்வியை தரமாக, சமமாக, இலவசமாக கொடுப்பது தான் மக்கள் அரசியல்.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுத்துவிட்டு தண்ணீருக்கு ரூ.3,000 செலவழிக்கும் நிலையை மாற்றியுள்ளார்கள்.
காசு கொடுத்து ஓட்டை பெறுவது தேர்தல் அரசியல், ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டேன். உங்களுக்காக உழைப்போம் என்று கேட்பது தான் மக்கள் அரசியல்.
வளர்ச்சி அடைந்த மாநிலத்தில் இலவச அரிசி எதற்கு? குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எதற்கு? பொங்கல் பண்டிகையின் போது மட்டும் ரூ.650 கோடிக்கு குடிக்கும் மக்களுக்கு, படம் பார்க்க செலவு செய்யும் மக்களுக்கு எதற்காக இலவசம்?" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |