செல்பி புகழ் கொரில்லா! செல்லமகாக வளர்த்தவரின் மடியில் உயிரை விட்ட சோகம்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்
காங்கோவில் குழந்தையாக மீட்க்கப்பட்ட கொரில்லா தன்னை வளர்த்த வனத்துறை அதிகாரியின் மடியிலே உயிரைவிட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடகாசி மலையில் இருந்து மீட்கப்பட்ட கொரில்லா காங்கோ நாட்டில் உள்ள பூங்கா ஒன்றில் வசித்து வந்தது. இந்த கொரில்லா மற்றும் இதனை பராமரிக்கும் அதிகாரியும் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் உலகளவில் பயங்கர வைரலாகியது.
பூங்காவில் பணியாற்றி வந்த மேத்திவ் சமாவு மற்றும் ஆண்ரே பவுமா ஆகியோரால் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னதாக கொரில்லா ஒன்று குழந்தை பருவத்தில் இருக்கும் பொழுது மீட்கப்பட்டது.
அதனின் குடும்பம் கடத்தல் காரர்களால் கொல்லப்பட்டுள்ளதாக அன்றில் இருந்து அந்த கொரில்லாவை அவர்களுடன் ஒருவராக நினைத்து பாசத்துடன் வளர்த்து வந்தனர். அதனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
It is with heartfelt sadness that Virunga announces the death of beloved orphaned mountain gorilla, Ndakasi.
— Virunga NationalPark (@gorillacd) October 5, 2021
C’est avec une profonde tristese que Virunga annonce le décès du gorille de montagne orpheliné Ndakasi.https://t.co/GdkJbhWESz pic.twitter.com/bsCKdEq8tB
இந்நிலையில் கொரில்லா நீண்ட நாளாக நோயில் பாதித்து வந்தது. இதற்கிடையில் 14 வயதான கொரில்லா தன்னை வளர்த்த ஆண்ரேவின் மடியிலே தனது உயிரை விட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அனைவராலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.