ஒரு பெரும் சாதனையுடன் சிங்கப்பூரில் தரையிறங்கிய கோட்டாபய! ஆனால் இது பெருமைப்படக்கூடியது அல்ல
மாலைதீவில் இருந்து இலங்கைக்கு கோட்டாபய நேற்று சென்ற நிலையில் அவர் சென்ற விமானம் அதிகம் பேர் டிராக் செய்த விமானம் என்ற சாதனையை செய்துள்ளது.
அதன்படி சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானமான சவூதியா 788ல் கோட்டாபய பயணித்தார். இதையடுத்து இந்த விமானம் உலகிலேயே அதிகளவானோரால் வழித்தடம் அறியப்பட்ட விமானமாக சாதனை பதிவு செய்துள்ளது.
இதற்கு காரணம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என்ற போதிலும் இது பெருமைப்படக்கூடிய விடயமாக அமையவில்லை. பாரிய பொருளாதார, அரசியல் சீரழிவுக்கு காரணமானவர் எனக் குற்றம் சுமத்தப்படும் கோட்டாபய, குறித்த விமானத்திலேயே மாலைதீவிலிருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு பயணித்தார்.
இதன்காரணமே குறித்த விமானத்தில் பயண வழித்தடத்தை உலகளாவிய ரீதியில் பலரும் அறிந்துகொள்ள ஆசைப்பட்டதில் வியப்பில்லை.