”கோட்ட கோ காம” போராட்டம் தொடரும்... இலங்கை பிரதமர் அறிவிப்பு!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து நடைப்பெறும் என அந்த நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களது பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகினார்.
"GotaGoGama protest can continue, police will not touch them, I will show my majority in Parliament" New Prime Ranil Wickremesinghe speaks to reporters
— NewsWire ?? (@NewsWireLK) May 12, 2022
இந்தநிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிரான”GotaGoGama” பொதுமக்களின் போராட்டம் தொடரும் என்றும், போலீசார் அவர்களை தொட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 250 அடிக்கு வானில் பறந்த ராணுவ டாங்கி..! உக்ரைன் தாக்குதலில் மிரண்ட ரஷ்ய வீரர்கள்
மேலும் தான் விரைவில் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிலைநிறுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.