250 அடிக்கு வானில் பறந்த ராணுவ டாங்கி..! உக்ரைன் தாக்குதலில் மிரண்ட ரஷ்ய வீரர்கள்
உக்ரைனின் அதிரடி தாக்குதலில் ரஷ்யாவின் ராணுவ டாங்கி தெறித்து 250 அடிகள் வரை வானில் பறந்து இருப்பது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது மூன்று மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலின் வெளியே ரஷ்ய ராணுவத்தின் டாங்கி உக்ரைனின் தாக்குதலில் வெடித்து சிதறியுள்ளது.
உக்ரைனின் இந்த திடீர் தாக்குதலில் ரஷ்ய ராணுவ டாங்கி வெடித்து தெறித்ததில் அதன் தலைப்பகுதி 250 அடிகள் (76m) வரை வானில் பறந்துள்ளது.
இத்தகைய தாக்குதலை நடத்திய ராணுவ ஆயுதம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவராத நிலையில், அதன் தாக்குதல் வீரியத்தை கொண்டு தாக்குதல் ஆயுதம் மிகவும் பயங்கரமான மற்றும் பெரிய ஆயுதமாக இருக்கும் என ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: பின்லாந்து வரலாற்றின் முக்கிய முடிவை நோக்கி நகர்கிறது...பிரதமர், ஜனாதிபதி கூட்டறிக்கை
மேலும் இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ஜப்பான் செய்தியாளர், இந்த எதிர்பாராத தாக்குதல் சம்பவத்தில் தனது ஓட்டுநர் செய்த தூரித நடவடிக்கையால் நூலிழையில் உயிர்த் தப்பியதாக தெரிவித்துள்ளார்.