8 அம்ச கோரிக்கைகள்... பிரதமர் ரணிலுக்கு ‘கோட்டா கோ கம’ போராட்டகாரர்கள் வலியுறுத்தல்
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் குழு தமது கூட்டு பிரகடனத்தை இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
கூட்டுப் பிரகடனத்தில், போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து குழுக்களின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அம்ச கோரிக்கைகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
Here is @kavindya_T articulating the joint declaration of the Aragalaya - a 8 point list of demands representing views of ALL GROUPS at the Aragalaya at Galle Face #GotaGoGama
— Kishan කරුණාරත්න (@kishankaru) May 13, 2022
Youth hav shown their diversity doesnt stop them coming together for common good. ?? Pols pl learn! pic.twitter.com/2yoU8j1oVD
கூட்டுப் பிரகடனத்தின் சுருக்கம் குறித்து நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்ததுடன், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து விரைவில் செயற்படுமாறு பிரதிநிதிகள் குழு புதிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையில் அமுலில் இருக்கும் கண்டதும் சுட உத்தரவு... பிரதமர் ரணில் முக்கிய அறிவிப்பு
‘கோ கோட்டா கம’போராட்டகாரர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு:
- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்
- 15 அமைச்சர்கள் மாத்திரமே இடம்பெறும் ஒரு இடைக்கால அரசாங்கம் 18 மாத காலத்திற்கு அமைக்க வேண்டும்
- 20வது திருத்தத்தை நீக்குதல் மற்றும் புதிய 21வது திருத்தத்தை கொண்டு வருவது போன்ற அரசியலமைப்பின் அத்தியாவசிய திருத்தங்கள்
- பொருளாதார நெருக்கடி, நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்கான கோரிக்கைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு சமூக பாதுகாப்பு அமைப்பு
- தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டும்
- நிதி மற்றும் வேறுவகையில் செய்யப்பட்ட அனைத்து குற்றங்களையும் வெளிப்படையான கண்காணிப்பு
- அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை
-
நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள்