இலங்கையில் அமுலில் இருக்கும் கண்டதும் சுட உத்தரவு... பிரதமர் ரணில் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் அமுலில் இருக்கும் கண்டதும் சுட உத்தரவு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களை கண்டதும் சுட அரசாங்கம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாட்டில் மீண்டும் வன்முறை வெடிக்காத வரை, கண்டதும் சுட உத்தரவு தொடர அனுமதிக்க மாட்டேன் என்று\இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையர்கள் வரவேற்கப்படுகிறார்கள்! இந்திய உயர் ஆணையம் அறிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை உடனடியாக நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ள அதே வேளையில் போராட்டக்காரர்களுக்கான பாதுகாப்பிற்கும் ரணில் உறுதியளித்து இருக்கிறார்.
அதேசமயம், இன்று அலரி மாளிகையில் கடமைகளை ஏற்ற பிரதமர் ரணில், இலங்கையில் தற்போதைய நிலை மற்றும் எப்படி முன்னோக்கி செல்வது என்பது குறித்து இந்திய உயர் ஆணையரை சந்தித்து ஆலோசித்துள்ளார்.