இலங்கையர்கள் வரவேற்கப்படுகிறார்கள்! இந்திய உயர் ஆணையம் அறிக்கை
இலங்கையர்களுக்கு விசா மறுக்கப்படுவதாக பரவி வரும் தகவலை இந்திய உயர் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய உயர் ஆணையம் அல்லது இலங்கையிலுள்ள இந்திய துணைத் தூதரகம் அல்லது இந்திய உதவி உயர் ஆணையம் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக பரவி வரும் தகவல்களை இந்திய உயர் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக, விசா பிரிவின் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியாததன் காரணமாக, செயற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விசா பிரிவில் பணியாற்றும் பெரும்பாலானோர் இலங்கையர்கள் என இந்திய உயர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் ரணிலுக்கு இலங்கை எதிர்க்கட்சி எதிர்ப்பு! வெளிப்படையாக அறிவிப்பு
மேலும், எங்கள் செயல்பாட்டை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப நாங்கள் முயற்சி செய்கிறோம்.
இலங்கையர்களுக்கு இந்தியாவுக்கு எளிதாகப் பயணிக்க உதவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப் போலவே இந்தியாவிலும் இலங்கையர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என உயர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.