இனிமேல் திருடு போன மொபைல்களை சுலபமாக கண்டுபிடிக்கலாம்!
நாடு முழுவதும் திருடு போன மொபைல் போன்களை கண்டுபிடிக்க இந்திய மத்திய அரசு “சஞ்சார் சாத்தி” என்ற புதிய இணைய சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
சஞ்சார் சாத்தி
நாடு முழுவதும் திருடு போன மொபைல் போன்களை சுலபமாக கண்டுபிடிக்கவும், அல்லது எளிதாக அதன் செயல்பாட்டை முடக்கவும், இந்திய மத்திய அரசு "சஞ்சார் சாத்தி" என்ற புதிய இணையதள சேவையை நாளை(May 17) அறிமுகம் செய்து வைக்க உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உங்களுடைய மொபைல் போன் எங்கு திருடப்பட்டு இருந்தாலும் அல்லது தொலைந்து இருந்தாலும், உங்கள் செல்போனில் IMEI எண்ணை பயன்படுத்தி எளிதாக கண்டுபிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவு
இந்த திட்டத்தை செயல்படுத்திவதற்காக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களின் IMEI எண்களையும் சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவிக்க கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த கண்காணிப்பு CEIR (மத்திய உபகரண அடையாளப் பதிவு) அமைப்பை திறன்பட இயக்க உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த CEIR முறையை மத்திய டெலிமேட்டிக்ஸ் துறை வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் IMEI எண்களை மொபைல் நிறுவனங்களிடம் இருந்து கட்டாயமாக பெரும் மத்திய அரசின் இந்த செயல்முறையினால் தனியுரிமை(Privacy) பாதிப்புகள் ஏற்படலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.