ரஷ்ய விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்? பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்திய விமான நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
குர்ஸ்க் விமான நிலையம்
தெற்கு பிராந்தியமான குர்ஸ்க்கில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கர் லொறி மீது ட்ரோன் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதனால் எண்ணெய் தேக்கத்தில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அனைத்து அவசர சேவைகளும் அந்த இடத்திலேயே செயல்படுவதாக குர்ஸ்க் ஆளுநர் ரோமன் ஸ்டாரோவாய் தெரிவித்தார்.
(AP Photo/Roman Chop)
அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்திற்கு உக்ரைன் தான் காரணம் என ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல்
ஏற்கனவே இரண்டு ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது விமான நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
@Ostorozhno Novosti via Reuters
ஆனால், ட்ரோன் தாக்குதல் குறித்து உக்ரேனிய அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.