2023ஆம் ஆண்டில் ஜேர்மனியில் பல தரப்பினருக்கும் அரசு உதவித்தொகைகள் அதிகரிப்பு...
2023ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கான நிதி உதவி முதல், வீடுகளை வெப்பப்படுத்துவதற்கான நிதி உதவி வரை பல அரசு உதவித்தொகைகளை உயர்த்த ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான உதவித்தொகை
2023 ஜனவரி 1 முதல், 2024 ஏப்ரல் 30 வரை நுகர்வோரின் பயன்பாட்டைப் பொருத்து மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
குழந்தைகளுக்கான நிதி உதவி
ஜனவரி 1ஆம் திகதி முதல், குழந்தைகளுக்கான நிதி உதவி மாதம் ஒன்றிற்கு, முதல் மூன்று குழந்தைகளுக்கு 250 யூரோக்களாக உயர உள்ளது.
ஊதிய மற்றும் வருமான வரியில் மாற்றம்
ஜனவரி 1ஆம் திகதி முதல், 2023ஆம் ஆண்டுக்கான வரி ஆண்டில், 10,908 யூரோக்கள் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தவேண்டியதில்லை.
வீட்டுக்கான உதவி
வீடுகளின் நிலைமையைப் பொருத்து, வீடுகளுக்கான நிதி உதவித்தொகை, மாதம் ஒன்றிற்கு 180 யூரோக்களில் இருந்து 370 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது.
49 யூரோக்கள் 'Deutschlandticket' பயணச்சீட்டு
உத்தேசமாக, 2023 ஏப்ரலிலிருந்து மே மாதத்திற்குள் இந்த 49 யூரோக்கள் 'Deutschlandticket' பயணச்சீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசியல்வாதிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.
Bürgergeld மாதாந்திர உதவித்தொகை
ஜனவரி 1 முதல் Bürgergeld மாதாந்திர உதவித்தொகை தனி நபருக்கு 449 யூரோக்களிலிருந்து 502 யூரோக்களாக உயர இருக்கிறது.
மாணவர்களுக்கான ஆற்றல் உதவி
2022 டிசம்பர் 1ஆம் திகதி ஜேர்மன் பல்கலை ஒன்றில் அல்லது தொழிற்பள்ளியில் பதிவு செய்துள்ள மாணவ மாணவியர் அனைவருக்கும் 200 யூரோக்கள் ஆற்றல் உதவித்தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது.