நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கும்! உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு
ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் தேவைப்படும் மக்களுக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்யா போர் தொடுத்து வரும் பதட்டமான சூழலில் மக்களிடையே உரையாற்றி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இவ்வாறு அறிவித்துள்ளார்.
இராணுவ அனுபவம் உள்ள எவரும் உக்ரைனின் பாதுகாப்பில் சேர வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ஆயுதங்கள் தேவைப்படம் மக்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கும் என அறிவித்துள்ளார்.
காயமடைந்த இராணுவ வீரர்கள் மருத்துவமனைகளில் இருப்பதால் இரத்த தானம் செய்ய வேண்டும் என்று அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
முதலாளிகள் அவர்களின் தொழிலாளர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
நாங்கள் எங்கள் நாட்டிற்காக போராடுவோம், ஒவ்வொரு நகரத்தின் சதுக்கங்களிலும் நாட்டை ஆதரிப்போம்.
ஆயுதப் படைகள் தயாராக இருக்கிறது, உக்ரைன் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.