கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு என்ன காரணம்? முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ரவி கேள்வி
கரூரில் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தமிழக ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி கேள்வி
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய 39 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் விஜய் பரப்புரையின் போது எத்தனை பொலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கமளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |