PF-க்கான 8.25 சதவீத வட்டிக்கு அரசு ஒப்புதல்., ஜூன் இறுதிக்குள் அக்கவுண்டில் வரும்
இந்திய அரசு, 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி (EPF) வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயித்து ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், நாட்டின் 7 கோடிக்கும் அதிகமான EPF சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி தொகை இந்த மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.

மார்ச் 2026-ல் நடைபெற்ற EPFO மத்திய நிர்வாகக் குழு (CBT) கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், 8.25 சதவீதம் வட்டி விகிதம் தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்த பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டதால், EPFO தற்போது வட்டி தொகையை சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கத் தயாராகியுள்ளது.
புதிய டிஜிட்டல் அமைப்பின் மூலம், வட்டி தொகை சேர்க்கப்பட்டவுடன் EPF உறுப்பினர்களின் கணக்குகளில் உடனடியாக பிரதிபலிக்கும். இதனால், முந்தைய ஆண்டுகளை விட வேகமாக வட்டி தொகை கிடைக்கும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக EPF வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவே நிலைத்துள்ளது. FY24-ல் 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்த முடிவு, EPF சந்தாதாரர்களுக்கு நிலைத்தன்மையையும், நீண்டகால சேமிப்பில் நம்பிக்கையையும் அளிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |