இந்திய ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள்.., அரசு ஒப்புதல்
இந்திய ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நவீன பீரங்கிகள்
இந்திய ராணுவமானது நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது, 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு பதிலாக, 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளில் 307 நவீன பீரங்கிகளும், அதனை இழுத்துச் செல்வதற்கு 327 வாகனங்களும் வாங்கப்படும்.
இந்த பீரங்கிகள் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்தி பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதால் இந்திய ராணுவத்திற்கு கூடுதல் வலிமை சேரும்.
மேலும், இந்த புதிய பீரங்கிகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமானது தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த பீரங்கிகளை தயார் செய்கிறது. இந்த தயாரிப்பில் 65 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும். இதனால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |