வங்கிகளில் முதல்முறை கடன் பெற சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை - மத்திய அரசு விளக்கம்
முதல்முறை வங்கிகடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணம் காட்டி கடன் மறுக்க கூடாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
CIBIL ஸ்கோர்
CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை கூறும் 300 முதல் 900 வரை உள்ள 3 இலக்க எண்ணாகும்.
CIBIL ஸ்கோர் அதிகமாக இருந்தால் நல்ல நிதி நிர்வாகத்தையும், குறைவாக இருந்தால் மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதையும் குறிக்கும்.
கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாது போன்ற காரணங்களால் சிபில் ஸ்கோர் குறையும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு நபருக்கு கடன் வழங்க அவரின் சிபில் ஸ்கோரை முக்கிய காரணியாக கருத்தில் கொள்கிறது.
இந்நிலையில், முதல்முறை வங்கிகடன் பெறுபவர்களுக்கு அவர்களுக்கு பூஜ்ஜியம் அல்லது குறைந்த சிபில் ஸ்கோர் காரணமாக கடன் வழங்க மறுக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல்முறை வங்கிகடன்
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, "முதல்முறை கடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோரை காரணம் காட்டி வங்கிக்கடன் மறுக்க கூடாது. கடன் விண்ணபங்களுக்கு குறைந்த பட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
அதேவேளையில், கடன் பெறுபவரின் நடத்தை பின்னணி, கடன் வரலாறு, கடந்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தியது, தீர்க்கப்ட்ட கடன்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யலாம்.
மேலும், கடன் தகவல் நிறுவனங்கள் தனிநபர்களுக்கு கடன் தகவல் அறிக்கையை வழங்க அதிகபட்சமாக ரூ.100 வரை வசூலிக்கலாம்.
கடன் தகவல் நிறுவனங்கள் கடன் வரலாறு உள்ள தனிநபர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இலவச கடன் தகவல் அறிக்கையை மின்னணு வடிவில் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |