காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.. திருமணத்திற்கு முன் மாப்பிளைக்கு அனுப்பிய அதிகாரி
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் காதலியின் திருமணத்தை நிறுத்த அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ஐந்து ஆண்டு காதல்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் ராஜேஷ். வல்லக்கோட்டையில் கிராம் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
ராஜேஷ் பெண்ணொருவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். அப்போது இருவரும் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண நிச்சயம் நடந்துள்ளது.
புகைப்படங்களை மாப்பிள்ளை அனுப்பிய காதலன்
இதனை அறிந்த ராஜேஷ் காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பியுள்ளார். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குறித்த பெண் ராஜேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ராஜேஷை கைது செய்தனர்.
பெண்ணொருவரின் புகாரின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.