ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டவணைப்படி இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, அனால் இப்போது, செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி பலர் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பால் போலி ரேஷன் கார்டுகளை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இன்னும் ஆதார்-ரேஷன் கார்டை இணைக்காதவர்கள் அந்த செயல்முறையை முடிக்க வேண்டும்.
இதற்காக, ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு-ஆதாரை அருகில் உள்ள ரேஷன் கடையிலோ அல்லது இ-சேவை மையத்தில் இணைக்கலாம்.
ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க முடியும்.
ஆன்லைனிலும் இணைக்கலாம். அதற்கு, நீங்கள் மாநில பொது விநியோக அமைப்பு (PDS) போர்ட்டலுக்குச் சென்று இணைக்கலாம்.
ரேஷன் கார்டு, ஆதார் அட்டை எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட்ட பிறகு, ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு முடிந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Aadhaar Card, Ration Card, Ration Card Aadhaar Link