6 ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கிய அரசு பள்ளி ஆசிரியை.., அம்பலமான உண்மை
கடந்த 6 ஆண்டுகளாக அரசு பள்ளிக்கு வராமல் சம்பளம் மட்டும் ஆசிரியை ஒருவர் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியை
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், மீரட்டில் பரிட்ஷித்கர் எனும் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.
இந்த பள்ளியில் உள்ள சுஜாதா யாதவ் என்ற ஆசிரியை ஒருவர் பல ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதனால், பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அம்மாநிலத்தில் மாவட்ட அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரிக்கு புகார் கிடைத்தது. பின்னர், விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது, ஆசிரியை சுஜாதா யாதவ் கடந்த 2920 நாட்களுக்கு முன் அப்பள்ளியில் பணியில் அமர்ந்ததாகத் தெரிந்தது. இதில் இவர், வெறும் 759 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால், இவர் விடுப்பு ஏதும் எடுக்கவில்லை.
அதற்கு மாறாக இவர் பள்ளிக்கு வாராத நாட்களுக்கும் சேர்த்து வருகை மட்டும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு பள்ளி முதல்வரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பள்ளியின் முதல்வருடன் சேர்த்து ஆசிரியையான சுஜாதா யாதவும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |