சமூக வலைத்தளங்களில் குவிந்து கிடக்கும் ஆபாச வீடியோக்கள்! நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு
சமூக வலைத்தளங்களில் பெருகி வரும் ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலியல், ஆபாச வீடியோக்கள் தனிப்பட்ட வலைத்தளங்களில் மட்டுமே இருக்கும் என்ற நிலை மாறி யூடியூப், டெலிகிராம், X (ட்விட்டர்) உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் தற்போது ஆக்கிரமித்துள்ளது.
இது தற்போது பெருகி வருவது அரசினை அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்துவதுடன், தவறான வீடியோக்களை நீக்கவும் வேண்டும் என அரசு முனைந்துள்ளது.
இதன் ஒருபடியாக, சமூக வலைதள நிறுவனங்கள் ஆபாச வீடியோக்கள், குழந்தைகள் தொடர்பான தவறான வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதை பற்றிய முழு விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த நிறுவனங்கள் உடனடியாக இத்தகைய உள்ளடக்கங்கள் மற்றும் வீடியோக்களை Block செய்ய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் இது போன்ற உள்ளடக்கங்கள் மற்றும் வீடியோக்களை Instant ஆக தடை செய்யும் அளவிற்கு Automatic கருவிகளை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை இந்த நிறுவனங்கள் உடனடியாக பயன்படுத்த வேண்டும்' என கூறியுள்ளது.
அத்துடன், Block செய்வது தீர்வாக இருந்தாலுமே கூட இத்தகைய வீடியோக்களை உடனடியாக கண்டுபிடித்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் யூடியூப் மற்றும் டெலிகிராம், அரசாங்க அறிக்கைக்கு அளித்த பதிலில், 'போர்னோகிராஃபி மற்றும் Child Sexual Abuse உள்ளடக்கங்களை தங்களுடைய தளங்களில் இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க Zero tolerance என்ற Policyயை பின்பற்றுவதாக தெரிவித்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |