59 பந்துகளில் சதமடித்தும் வீண்: தங்கையின் அணியை சூறையாடிய அக்கா..WBBL-யில் சாதனை
Sydney thunder record chase in wbbl 2026: சிட்னி தண்டர் அணி 226 ஓட்டங்கள் இலக்கினை சேஸிங் செய்து சாதனை படைத்தது.
மகளிர் பிக் பேஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் நிர்ணயித்த 226 ஓட்டங்கள் இலக்கினை, சிட்னி தண்டர் அணி 19.2 ஓவர்களில் எட்டி சாதனை படைத்தது.
கிரேஸ் ஹாரிஸ்
பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிக் பேஷ் லீக் போட்டி ஆலன் பார்டர் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.
That's 100 🤩 Grace Harris take a bow 🤲 #WBBL12 https://t.co/YNMGCO2ztT
— Weber Women's Big Bash League (@WBBL) November 19, 2026
முதலில் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் குவித்தது. 59 பந்துகளில் சதம் விளாசிய கிரேஸ் ஹாரிஸ் (Grace Harris), 9 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் குவித்தார்.
சார்லி க்னோட் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும், யஸ்டிகா பாட்டியா 18 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர்.
லௌரா ஹாரிஸ்
பின்னர் ஆடிய சிட்னி தண்டர் அணி 19.2 ஓவர்களில் 226 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ருத்ரதாண்டவம் ஆடிய லௌரா ஹாரிஸ் (Laura Harris) ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 63 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார். அனிகா லீராய்ட் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.
EVERY ball of the fastest ever WBBL 50 🤩 Laura Harris was putting on a show! #WBBL12 https://t.co/roJmKu3n9Y
— Weber Women's Big Bash League (@WBBL) November 19, 2026
சிட்னி தண்டர் அணி எட்டிய 226 ஓட்டங்கள் இலக்கு, மகளிர் பிக் பேஷ் லீக் வரலாற்றில் சேஸிங் செய்யப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். அதேபோல், இரு அணிகளும் இணைந்து எடுத்த 451 ஓட்டங்கள் என்பதும் சாதனையாகும்.
இப்போட்டியில் சுவாரஸ்யமான மற்றொரு விடயம் என்னவென்றால், சிட்னி அணியை வெற்றி பெற வைத்த லௌரா ஹாரிஸ், பிரிஸ்பேன் அணியில் சதம் விளாசிய கிரேஸ் ஹாரிஸின் மூத்த சகோதரி ஆவார்.
