இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள திடீர் சிக்கல்

United Kingdom Citizenship
By Balamanuvelan Feb 19, 2026 05:40 AM GMT
Report

இம்மாதம், அதாவது, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள், தங்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய குடியுரிமையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையும் என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள திடீர் சிக்கல் | Grace Period Request For Uk Dual Citizenship

விடயம் என்னெவென்றால், பிரித்தானியர்கள் பல நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். உதாரணமாக, ஸ்பெயின் நாட்டில் வாழும் பிரித்தானியர்கள், தங்கள் பிரித்தானியக் குடியுரிமையைத் துறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஸ்பெயின் குடியுரிமை கிடைக்கும்.

அதுபோல, ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இதுவரை எந்த பிரச்சினையுமின்றி பல நாடுகளுக்கு பயணித்து, பிரித்தானியாவுக்கு திரும்பி வந்தார்கள்.

அப்படி பிரித்தானிய மற்றும் இத்தாலி நாட்டு இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர், தற்போது பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பிப்ரவரி 25ஆம் திகதிக்குப் பிறகுதான் பிரித்தானியாவுக்குத் திரும்புவார்.

ஆக, அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பும்போது, அவரிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லாததால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். 

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரித்தானிய இளவரசிக்கு இறுகும் சிக்கல்

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரித்தானிய இளவரசிக்கு இறுகும் சிக்கல்

பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் இந்த திடீர் முடிவால், வெளிநாடுகளில் வாழும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, மற்றும், வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள, ஏராளம் பிரித்தானியர்கள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.

அப்படி சிக்கலை சந்திக்க உள்ளவர்கள், 589 பவுண்டுகள் கொடுத்து, ’certificate of entitlement’ என்னும் சான்றிதழை வாங்கவேண்டும் என்கிறது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

பிரித்தானியா மற்றும் மற்றொரு நாட்டின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், அவர்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லையென்றால், இந்த certificate of entitlement என்னும் சான்றிதழை வாங்கி, அதை தங்களிடம் இருக்கும் பாஸ்போர்ட்டில் இணைத்துக்கொள்ளவேண்டும்.

அப்படி அந்த certificate of entitlementம், பிரித்தானிய பாஸ்போர்ட்டும் இல்லாத இரட்டைக் குடியுரிமை கொண்டர்கள் பிரித்தானியாவுக்கு வரும் படகு, விமானம் அல்லது ரயில் எதிலுமே ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சலுகை அளிக்க கோரிக்கை

இந்நிலையில், இந்த விதியால் பாதிப்புக்குள்ளாகியுள்ள பிரித்தானியர்களுக்கு சலுகை ஒன்றை அளிக்கவேண்டும் என லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள திடீர் சிக்கல் | Grace Period Request For Uk Dual Citizenship

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியைச் சேர்ந்த, நிழல் புலம்பெயர்தல் மற்றும் புகலிடத்துறை அமைச்சரான Will Forster, அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பிரித்தானியர்கள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லாத பிரித்தானியர்கள் பலர் இந்த விதியால் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

ஆகவே, அத்தகைய பிரித்தானியர்களுக்கு, ஒரு ’grace period’ கொடுக்கப்படவேண்டும் என லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US