ஈரான் போருக்கு காரணமானவரின் திடீர் மரணம்... படுகொலை என எழுந்த சந்தேகம்

Donald Trump Russian Federation Iran
By Arbin Jul 13, 2026 04:24 PM GMT
Report

அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் திடீர் மரணம் இணையத்தில் பல சந்தேகங்களின் அலையைத் தூண்டியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்

ஈரான் மற்றும் ரஷ்யாவை நீண்டகாலமாக விமர்சித்து வந்த அவருக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் பதிவிட்டுள்ளனர். ஆனால், அந்தக் கூற்றுகளை ஆதரிக்கும் வகையில் எந்தவொரு ஆதாரமோ அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கையோ இதுவரை வெளியாகவில்லை.

ஈரான் போருக்கு காரணமானவரின் திடீர் மரணம்... படுகொலை என எழுந்த சந்தேகம் | Graham Sudden Death Speculation

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மிக நெருங்கிய வட்டாரத்தில் ஒருவரும், அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை விவகாரங்களில் முக்கியக் குரலாகத் திகழ்ந்தவருமான மூத்த குடியரசுக் கட்சித் தலைவர் சனிக்கிழமையன்று காலமானார்.

71 வயதான அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது அலுவலகம் அறிவித்தது; ஆனால், இறப்புக்கான குறிப்பிட்ட காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

மாரடைப்பைத் தொடர்ந்து கிரஹாமின் இல்லத்தில் இருந்தே அவசர உதவிக்கு அழைத்துள்ளனர். இந்த நிலையில், கிரஹாம் மரணமடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவரிடம் பேசியதாகவும், விஷம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் யூகங்களை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

அத்துடன் கிரஹாம் மாரடைப்பில் இறந்ததாக வெளியாகியுள்ளத் தகவலை தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார். கிரஹாம் மரணமடைவதற்கு முன்பு, கடைசியாக உக்ரைன் பயணம் மேற்கொண்டிருந்தார்.

உக்ரைனில் அவர் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தார், இராணுவ வசதிகளைப் பார்வையிட்டார் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைத் தொகுப்பையும் ஆதரித்தார்.

ஈரான் போருக்கு காரணமானவரின் திடீர் மரணம்... படுகொலை என எழுந்த சந்தேகம் | Graham Sudden Death Speculation

மட்டுமின்றி, ஈரான் மீதான கடுமையான தடைகளையும், தெஹ்ரான் விவகாரத்தில் அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டையும் ஆதரித்து வந்த கிரஹாம், நீண்ட காலமாகவே அமெரிக்காவில் ஈரானின் மிகக் கடுமையான விமர்சகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்துள்ளார்.

கிரஹாம் மரணமடைவதற்கும் 5 நாட்கள் முன்பு ஈரானில் இருந்து வெளியான ஒரு சமூக ஊடகப்பதிவிற்கு பதிலளித்துள்ள அவர், கொலைப்பட்டியல் வெளியிடுபவர்கள் தமது சமீபத்திய புகைப்படத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

பயங்கரவாதி

ரஷ்யாவின் அதி தீவிர தேசியவாதியான அலெக்சாண்டர் டுகின் ஒரு செய்தி ஊடக விவாதத்தின்போது, கிரஹாம் போன்றவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மேலும், ட்ரம்புக்கு பிரச்சனைகளை உருவாக்குபவர் இவர் என்றும், இவர் இல்லாமல் உலகம் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ரஷ்ய அரசாங்கம் 2023-இல் கிரஹாமைத் தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்த்ததுடன், 2024-இல் அவரை ஒரு பயங்கரவாதியாகவும் முத்திரை குத்தியது.

ஈரான் போருக்கு காரணமானவரின் திடீர் மரணம்... படுகொலை என எழுந்த சந்தேகம் | Graham Sudden Death Speculation

2023-இல் ரஷ்யாவிற்கு பதிலளித்துள்ள கிரஹாம், புடின் இல்லாவிட்டால் உலகம் சிறப்பாக இருக்கும். எப்படியாவது அவர் அகற்றப்படுவார் என்று நான் நம்புகிறேன் என்றார்.

சமீபத்திய ஈரான் போருக்கு கிரஹாமின் ஆலோசனையும் ஆதரவும் காரணம் என்றே கூறப்படுகிறது. இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதிகளும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிய நிலையில், ட்ரம்ப் மட்டுமே ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US