முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு மா போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க கடலை மா ஒன்று போதும்.
எந்தெந்த சருமம் உடையவர்கள் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
எண்ணெய் சருமத்திற்கு பேஸ்பேக்
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1 ஸ்பூன் கடலைபருப்பு சேர்த்து ரோஸ் வாட்டர் நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்டை முகத்தில் மென்மையாக தடவி சுமார் 15 நிமிடங்களுக்கு பின் சுத்தம் செய்யவும்.
அடுத்து, சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதனை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்.
வறண்ட சருமத்திற்கு பேஸ்பேக்
ஒரு பாத்திரத்தில் 3 வாழைப்பழங்களை போட்டு பிசைந்து 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
அடுத்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும்.
இந்த பேக்கை வாரம் 2 முறை முகத்தில் தடவி வந்தால் சரும வறட்சி குறையும்.
கூட்டு சருமத்திற்கு பேஸ்பேக்
இது போன்ற சருமத்தை எண்ணெய் மற்றும் வறண்ட சருமம் கலவை என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை சருமத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
இதனை வாரம் ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்திவந்தால் முகம் பளிச்சென்று போதும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |