சரும பொலிவை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு மா போதும்: எப்படி பயன்படுத்தலாம்?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற உளுந்து மா போதும்.
1. உளுந்து மா + மஞ்சள்
மஞ்சள் மற்றும் பாலை உளுந்து மாவுடன் கலந்து பேஸ்ட் செய்யவும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்திவர கரும்புள்ளிகளை குறைத்து, சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
2. உளுந்து மாவு + கற்றாழை
கற்றாழை ஜெல்லுடன் உளுத்து மாவு சேர்த்து மிருதுவாக பேஸ்ட் செய்யவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இது சருமத்தை ஒளிரச் செய்யவும், வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
3. உளுந்து மாவு + தேன்
உளுத்து மாவுடன் தேன் கலந்து மென்மையான பேஸ்ட் செய்யவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்திவர சருமத்தை ஒளிரச் செய்து இயற்கையான ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |