Grammys 2024: 4வது முறையாக சிறந்த ஆல்பம் விருது., Taylor Swift சாதனை
அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) வரலாறு படைத்துள்ளார்.
2024 Grammy இசை விருதுகளில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. டெய்லர் ஸ்விஃப்ட் நான்காவது முறையாக ஆண்டின் சிறந்த ஆல்பம் விருதை வென்றார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கிராமி விருதுகளில் Midnights ஆல்பம் விருது பெற்றது.
இதன்மூலம், டெய்லர் ஸ்விஃப்ட் சிறந்த ஆல்பம் பிரிவில் நான்கு முறை விருதை வென்ற முதல் பாடகி ஆனார்.
சிறந்த ஆல்பத்திற்கான கிராமி இசை விருதை மூன்று முறை வென்ற பாடகர்களில் Frank Sinatra, Paul Simon and Stevie Wonder ஆகியோர் அடங்குவர்.
டெய்லர் ஸ்விஃப்ட் இந்த விருதை Celine Dion-யிடமிருந்து பெற்றார். மிட்நைட்ஸ் ஆல்பம் டெய்லர் ஸ்விஃப்ட் தயாரித்த பத்தாவது ஆல்பமாகும்.
இந்த ஆண்டு, டெய்லர் ஆண்டின் சாதனை, ஆண்டின் பாடல், சிறந்த பாப் தனி செயல்திறன், சிறந்த பாப் டூயோ மற்றும் சிறந்த பாப் குரல் ஆல்பம் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மிட்நைட்ஸ் சிறந்த பாப் குரல் ஆல்பம் விருதையும் வென்றது.
Taylor Swift-இன் அடுத்த ஆல்பம்
கிராமி விருதுகளில் டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு ஆச்சரியமான அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் தனது 11வது ஸ்டுடியோ ஆல்பத்தை வெளியிடுவதாக கூறினார். சிறந்த பாப் குரல் ஆல்பத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
புதிய ஆல்பம் ஏப்ரல் 19-ஆம் திகதி வெளியிடப் போவதாகவும், The Tortured Poets Department என்ற பெயரில் ஆல்பம் வெளியிடப் போவதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Grammy Awards 2024, Taylor Swift, Grammys 2024, Taylor Swift makes history, Taylor Swift Midnights Album, Best Album of the Year Midnights