61 வயது பாட்டியை காதலிக்கும் 24 வயது இளைஞன்! சொல்லும் காரணம்: வைரலாகும் புகைப்படம்
அமெரிக்காவில் 24 வயது மதிக்கதக்க இளைஞர் 61 வயது மதிக்கத்தக்க பாட்டிய வயது பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது சமூகவலைத்தளங்களில் பல விதமான கருத்துக்களை கொண்டுள்ளது.
அமெரிக்காவின் Georgia-வில் இருக்கும் Dairy Queen உணவகத்தில் கடந்த 20212-ஆம் ஆண்டு Quran McCain(24) என்ற இளைஞன், தன்னுடைய 15 வயதில் Cheryl McGregor(61) என்பவரை சந்தித்துள்ளார்.
இந்த உணவகத்தில் தான் Cheryl McGregor-ன் மகன் Chris மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அவ்வப்போது, Cheryl McGregor இந்த உணவகத்திற்கு வந்து செல்லும் போது, Quran McCain நட்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து இருவரும் நன்றாக பழகி வந்துள்ளனர். கடந்த ஆண்டு வரை இவர்களுக்குள் எந்த ஒரு காதலும் இல்லை. இந்நிலையில், இவர்கள் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் 37 வயது வித்தியாசம் இருப்பதால் இவர்களை இணையவாசிகள் சில மோசமான கமெண்ட்களால் திட்டி வருகின்றனர்.
இவர்களுக்கு சமூகவலைத்தளமான டிக் டாக்கில் 826,000 பலோவர்கள் உள்ளனர். இதில் அவர்கள் போடும் வீடியோ, பலரையும் வெறுக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும் இவர்கள் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தங்கள் காதல் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். Quran McCain தங்களை கமெண் செய்பவர்களுக்கு, இது வயது வித்தியாசம் என்றாலும், நாங்கள் அதை நினைத்து பார்க்கமாட்டோம்.
அவர் என்னுடைய இளம் ஆவி, ஆன்மா மற்றும் அழகான இதயம் கொண்டவர். நான் அவருடைய பணத்திற்காகவோ அல்லது தேவைக்காவோ பயன்படுத்திக் கொள்கிறேன் என்று பலர் கூறுவது, தவறான கருத்து என்று கூறியுள்ளார்.
மேலும், Cheryl McGregor, அவர் மிகவும் இரக்கமுள்ளவர். நான் இவரைத் தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.