பிரான்சில் மாயமான இரண்டு வயது குழந்தை: வழக்கில் அதிரடி திருப்பம்
பிரான்சில் மாயமான இரண்டு வயதுக் குழந்தை ஒன்று, பின்னர் வெறும் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மாயமான சிறுவன்
பிரான்சிலுள்ள Le Vernet என்னும் கிராமத்தைச் சேர்ந்த Emile Soleil என்னும் இரண்டு வயதுச் சிறுவன், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனான்.
குழந்தையை பொலிசார் வலைவீசித் தேடியும் கிடைக்காத நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர், உயிரற்ற குழந்தை ஒன்றின் உடல் பாகங்களைக் கண்டு பொலிசாருக்கு தகவலளிக்க, அது காணாமல் போன Emileஉடைய உடல் என்பது உறுதிசெய்யப்பட்டது.
வழக்கில் அதிரடி திருப்பம்
இந்நிலையில், இன்று காலை, Emileஉடைய தாத்தாவான Philippe Vedoviniயும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், குழந்தை காணாமல்போனபோது அவன் தன் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருந்தான்.
அத்துடன், குழந்தை காணாமல் போன நேரத்தில், பிரெஞ்சு ஊடகங்கள் அவனது தாத்தாவைக் குறித்த ஒரு பழைய செய்தியை சுட்டிக் காட்டியிருந்தன.
அதாவது, 1990களில், பள்ளி ஒன்றில் நிகழ்ந்த வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தில் Emileஉடைய தாத்தாவான Philippeன் பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆகவே, அவருக்கும் குழந்தை மாயமானதற்கும் தொடர்பு இருக்கலாமோ என பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அவை சந்தேகப்பட்டதுபோலவே, தற்போது Emileஉடைய தாத்தாவான Philippeம் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆனால், என்ன ஆதாரம் கிடைத்தது, எதனால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
என்றாலும், ’voluntary homicide’ என்னும் வகையிலான கொலை வழக்கில், சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |