70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா!
பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சூசன் ஹேவன்ஹான் (71) மற்றும் ஜான் (70) என்ற வயதான தம்பதிக்கு நீச்சல் குளம், திரையரங்கம், டென்னிஸ் மைதானம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய சுமார் 3.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பங்களா வீடு பரிசாக கிடைத்துள்ளது.
பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சூசன் ஹேவன்ஹான் RSPCAவின் ஓமேஸின் பிரச்சாரத்தில் வெறும் 10 பவுண்டுகளை மட்டுமே கட்டணங்களாக செலுத்தி மிகப்பெரிய பங்களா மாளிகையை பரிசாக வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் இவற்றில் சுவாரஸ்யமானது செய்தி என்வென்றால், சம்பந்தப்பட்ட ஓமேஸ்(Omaze's) நிறுவனம் சூசன் ஹேவன்ஹான் (71) மற்றும் ஜான் (70) தொடர்பு கொண்டு பரிசு விவரங்களை தெரிவித்த போது தெற்கு பிரான்சில் விடுமுறையை கழித்து கொண்டு இருந்த அவர்கள் அதனை பெரிதாக நம்ப மறுத்து மது அருந்த சென்றுள்ளனர்.
இதனால் அவரது மகள் ஹாரியட்யை(Harriet) தொடர்பு கொண்ட ஓமேஸ் அதிகாரிகள் தகவலை தெரிவித்து அவரது பெற்றோர்களுக்கு அவர்களது வெற்றியை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 10 பேரக்குழந்தைகளுக்கு பாட்டியான சூசன் (71) மற்றும் ஜான் (70) இருவரும் தனது குடும்பத்திடன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கனவு பங்களாவில் சொந்த உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் கோர்ட், குளம் மற்றும் சினிமா திரையரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.
மேலும் மிகப்பெரிய 6 படுக்கையறைகளை கொண்ட இந்த பங்களாவில், மிகச்சிறந்த கலை நுட்பத்துடன் கூடிய சமயலறை, பூந்தோட்டம், என பல வசதிகள் கொண்டுள்ளன.
இதுத் தொடர்பாக பேசிய சூசன் ஹேவன்ஹான், 'நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஓமேஸிடமிருந்து முதலில் அழைப்பு வந்தபோது, அது ஒரு விரிவான புரளி என்று என் கணவர் நம்பினார், அவர் என்னை அருகில் இருந்த பாருக்கு அழைத்து சென்றார், ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு எனது வீட்டில் இருந்த வந்த அழைப்பின் பிறகு தான் இதனை உண்மையில் உண்மை என நம்பினேன் எனத் தெரிவித்தார்.
நாங்கள் 80 ஆண்டுகளாக கல்வி துறையில் பணியாற்றி வருகிறோம், எனவே இந்த பரிசு எங்கள் ஓய்வு காலத்தை அனுபவிக்க உதவும்.
கூடுதல் செய்திகளுக்கு: இனிப்பான செர்ரி பழங்களில்... ரஷ்ய வீரர்களுக்கு விஷம் வைத்த உக்ரைனிய விவசாயிகள்
அத்துடன், எங்களிடம் பத்து அழகான இளம் பேரக்குழந்தைகள் உள்ளனர், அவர்கள் இந்த வீட்டை முற்றிலும் கொண்டாடுவார்கள், அவர்கள் அனைவரும் டென்னிஸை விரும்புகிறார்கள், எனவே இந்த கோடையில் நாங்கள் எங்கள் சொந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பை நடத்துவோம் என மகிழ்சியாக தெரிவித்தார்.