இனிப்பான செர்ரி பழங்களில்... ரஷ்ய வீரர்களுக்கு விஷம் வைத்த உக்ரைனிய விவசாயிகள்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உக்ரைனிய நகரமான மெலிடோபோலில் விஷம் ஏற்றப்பட்ட செர்ரிஸ்களை திருடிய ரஷ்ய படைவீரர்களுக்கு கடுமையான உடநல பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் தொடக்க நாள்கள் முதலே தென்-கிழக்கு உக்ரைனிய நகரமான மெலிடோபோல் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.
இவ்வாறு ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நகரங்களில் ரஷ்ய வீரர்கள் கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக உக்ரைனிய பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் குற்றம் சாட்டிவந்தது.
GETTY
இந்தநிலையில், மெலிடோபோலில் உள்ள விவசாயிகளால் விஷம் ஏற்றப்பட்ட செர்ரிகளை திருடி உண்ட ரஷ்ய படை வீரர்கள் கடுமையான உடநல பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக உக்ரைனிய தொலைக்காட்சிக்கு அப்பகுதியின் மேயர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் செர்ரிகளில் விஷம் ஏற்றிய உக்ரைனிய விவசாயிகளின் இந்த செயல் ஒருவிதமான பாகுபாடு இயக்கம் எனத் தெரிவித்து பாராட்டினார்.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: உணவு தானிய தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்திற்கு..மேற்கத்திய நாடுகளின் தவறுகளே காரணம்: ரஷ்யா குற்றச்சாட்டு
மேலும் உக்ரைனிய மக்களிடம் இருந்து திருடும் ரஷ்ய படைவீரர்களின் செயலுக்கு கடுமையான கண்டனமும் தெரிவித்தார்.
மேயர் இவான் ஃபெடோரோவ் ரஷ்ய படைகளால் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் எனபது குறிப்பிடதக்கது.
EPA