சுங்கச்சாவடியில் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட மல்யுத்த வீரர் கிரேட் காளி! வைரலாகும் வீடியோ
WWE மல்யுத்த வீரர் கிரேட் காளி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 8 அடி உயரமும், ஆஜானுபாகுவான உடல்வாகுவும் கொண்ட WWE மல்யுத்த வீரர் கிரேட் காளி.
இவர் தொடர்பிலான வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் காளி வாக்குவாதம் செய்வது தெரிய வருகிறது.
ஊழியர் ஒருவர், காளியிடம் அடையாள அட்டையை கேட்டபோது அவர் தன்னை அறைந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் காளியின் காரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதனால் காரில் இருந்து இறங்கிய காளி அவர்களுடன் கோபமாக பேசுகிறார் என்பது வீடியோவில் தெரிகிறது.
#Khali allegedly slaps a toll plaza employee at #Ladowal toll plaza.
— Satya Tiwari (@SatyatTiwari) July 12, 2022
this after Toll plaza employees allegedly bully him, call him a #monkey pic.twitter.com/WnY1meLrV9
இதுகுறித்து காளி கூறுகையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் தன்னுடன் படம் எடுக்க விரும்பியதாகவும், தன்னை சுற்றி வளைத்து தவறாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் யாரும் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.