கோடீஸ்வரர்களிடையே பிரபலமாக இருக்கும் கிரேக்கத்தின் கோல்டன் விசா திட்டம்: முழுமையான தகவல்
கிரேக்கத்தின் கோல்டன் விசா திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் முதலீட்டாளர்கள் பலர் அந்த நாட்டில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள்
ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மட்டும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே தரவுகளில் தெரிய வந்துள்ளது. கோல்டன் விசா பெறுவதற்கு குறைந்தபட்ச முதலீடு போதுமானது என்ற தேவையை கருத்தில் கொண்டு இந்திய முதலீட்டாளர்கள் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
ஆனால் தற்போது கோல்டன் விசா திட்டத்தில் முதலீடு என்பது இருமடங்காக அதிகரித்துள்ளது. முதல் நிலை நகரங்களான Athens, Thessaloniki, Mykonos, மற்றும் Santorini ஆகிய பகுதிகளில் தற்போது குறைந்தது இந்திய மதிப்பில் ரூ 7 கோடி அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
அதேவேளை, கிரேக்கத்தின் எஞ்சிய பகுதிகளில் தற்போது 400,000 யூரோ அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும். கிரேக்கத்தின் கோல்டன் விசா திட்டமானது ஐரோப்பிய நாட்டவரல்லாத நபர்களை கிரேக்கத்தில் முதலீடு செய்யவும் குடியிருக்கவும் வாய்ப்பளிக்கும் முன்னெடுப்பாகும்.
இந்த திட்டத்தில் தகுதி பெற, ஐரோப்பிய நாட்டவரல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும், குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு முக்கியம், சிறந்த பாக்க வழக்கங்கள் கொண்டவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
இந்த கோல்டன் விசா திட்டத்தால் கிடைக்கும் ஆதாயம் என்னவென்றால், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஏதுமின்றி கிரேக்கத்தில் வசிக்கலாம். ஷெங்கன் மண்டலத்திற்குள் விசா இல்லாது பயணிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வதிவிட அனுமதி. 7 ஆண்டுகளுக்கு பின்னர் கிரேக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: செல்லுபடியாகும் கடவுச்சீட்டு: தற்போதைய மற்றும் முந்தைய விசாக்கள். முதலீட்டுக்கான சான்று: சொத்து ஒப்பந்தங்கள், வங்கி அறிக்கைகள் போன்றவை.
பயோமெட்ரிக் தரவு: விண்ணப்பத்திற்குத் தேவை. சுகாதார காப்பீடு: கிரீஸில் செல்லுபடியாகும் பாலிசி. குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர் என்பதற்கான சான்று, கிரேக்க மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |