இந்திய வம்சாவளி இளைஞரை மணந்த இளவரசி: மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்
ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இந்திய வம்சாவளியினரான இளைஞர் ஒருவரை கரம்பிடித்துள்ள நிலையில், அவர்களுடைய திருமணம் சார்ந்த புகைப்படங்கள் வெளியாகி மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
இந்திய வம்சாவளி இளைஞரை மணந்த இளவரசி
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் கான்ஸ்டான்டைன். அவரது மனைவி ராணி ஆனி மேரி.
தம்பதியரின் மகளான இளவரசி தியோடரா, அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரான மேத்யூ குமாரை கரம்பிடித்துள்ளார்.
குமார், இந்திய வம்சாவளியினரும், ஃபிஜி நாட்டவருமான ஷலேந்திர சாம் குமார் என்பவருக்கும் யோலாண்ட்ரா ஷெர்ரி ரிச்சட்ட்ஸ் என்னும் பெண்ணுக்கும் பிறந்தவர்.
2016ஆம் ஆண்டு, அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்றபோது தியோடரா, குமாரை சந்திக்க, இருவரும் காதலில் விழ, 2018ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.
ஆனால், 2020ஆம் ஆண்டு கோவிட் காரணமாகவும், 2023ஆம் ஆண்டு தியோடராவின் தந்தையின் மரணம் காரணமாகவும் இருமுறை திருமணம் தள்ளிப்போக, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குமாரும் தியோடராவும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இருவரது திருமணம் தொடர்பான புகைப்படங்களுடன், குமாரும் தியோடராவும் தங்கள் திருமணத்துக்கு முன் இந்தியாவிலுள்ள டெஹ்ராடூனில் பாரம்பரிய முறைப்படியான மஞ்சள் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டதைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
திருமணத்தில் ராஜ குடும்பத்தினர் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ள, குமார் தியோடரா திருமணம், ஏதென்ஸிலுள்ள Metropolitan Cathedral என்னும் தேவாலயத்தில் விமரிசையாக நடைபெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |