15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை: ஐரோப்பிய நாடொன்றின் தீர்க்கமான முடிவு
15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டத்தை கிரீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகம் பயன்படுத்த தடை
டிஜிட்டல் உலகில் இருந்து சிறுவர்களை மீட்கும் முயற்சியில் கிரீஸ் அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டம் 2027 ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவலையை ஏற்படுத்திய தரவுகள்
கிரீஸ் நாட்டில் தொடக்க பள்ளியில் பயின்று வரும் 75% சிறுவர்கள் ஏற்கனவே சமூக ஊடக பக்கங்களில் தீவிரமாக செயல்பாட்டில் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பான இணைய மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கவலையை ஏற்படுத்தும் தரவுகளின் அடிப்படையில், இந்த புதிய சட்டமானது கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சட்டத்திற்கு அந்நாட்டு மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
80% பெரியவர்கள் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக கருத்துக்கணிப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |