தடுப்பூசி மறுப்பவர்களுக்கு இனி மாதந்தோறும் அபராதம்: முக்கிய ஐரோப்பிய நாடு அதிரடி

covid19 vaccine greece fined
By Arbin Dec 01, 2021 11:01 AM GMT
Report

கிரேக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் முதியவர்கள் இனி ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த நேரிடும் என நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

தடுப்பூசி போட மறுக்கும் மக்கள் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த நேரிடும் கடும்போக்கு நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

கிரேக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் முதியவர்கள் இனி மாதந்தோறும் 100 யூரோ அபராதமாக செலுத்த நேரிடும். 60 வயது கடந்த அனைவருக்கும் கிரேக்கத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான கொரோனா மாறுபாடு ஒருபக்கம், நெருங்கும் பனிக்காலம் ஒருபக்கம் என அச்சுறுத்தல் நெருக்கும் நிலையிலேயே கிரேக்க அரசாங்கம் மாதந்தோறும் அபராதம் என்ற கடும்போக்கு நடவடிக்கையை முன்னெடுக்க இருக்கிறது.

குறித்த நடவடிக்கையை ஆதரித்துப் பேசிய பிரதமர் Kyriakos Mitsotakis, இது ஆரோக்கிய வாழ்வுக்கு நாம் அளிக்கும் கட்டணமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். மேலும், நமது சக குடிமக்களின் பாதுகாப்பில் நாம் கவனம் செலுத்துகிறோம், இதன் காரணமாக அவர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் Kyriakos Mitsotakis.

60 வயது கடந்த குடிமக்கள் எதிர்வரும் ஜனவரி 16ம் திகதிக்குள் தங்கள் முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றூக்கொள்ள பதிவு செய்ய தவறினால், ஒவ்வொரு மாதமும் 100 யூரோ அபராதமாக செலுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதால், ஊரடங்கு உட்பட கட்டாய நெருக்கடிக்கு நாடு தள்ளப்படுவதை தவிர்க்கலாம் என கிரேக்க அரசாங்கம் நம்புகிறது.

ஆனால், மாதம் 100 யூரோ அபராதம் விதிக்கப்படுவது மிகவும் கடுமையான முடிவு எனவும், முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக அளிக்கப்படுவதே 730 யூரோ தான் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US