கிரீஸ் ஹெலிகாப்டர் விபத்து: தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதிக்கு நேர்ந்த துயரம்
Greek Helicopter Crash Newlywed British Couple killed: கிரீஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
கிரீஸின் புகழ்பெற்ற சிஃப்னோஸ்(Sifnos) சுற்றுலாத் தீவில் நிகழ்ந்த கோரமான ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவுக்காக சென்ற பிரித்தானிய தம்பதி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் புதிதாக திருமணம் ஆன பிரித்தானிய தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபெர்ட் ஆகியோர் உயிரிழந்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
🚨 Private helicopter crashes in Sifnos
— Greek City Times (@greekcitytimes) August 17, 2026
A private helicopter has crashed in the Tholos area of Sifnos, near the island’s helipad, triggering a major emergency response.
🔥 A fire broke out following the crash, while initial reports say three people were on board. Emergency… pic.twitter.com/j8kv5CshrJ
இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வான் வழி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த மூன்றாவது நபர் முன்னாள் இராணுவ வீரரும், 3 குழந்தைகளின் தந்தையுமான ஜோர்ஜோஸ் ராய்கோஸ் என்ற விமானி ஆவார்.
Bellavia Aviation Services என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சிக்னோஸ் பகுதியில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக உள்ளூர் நேரப்படி மாலை 6.00 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |