கமகம வாசணையில் வீடே மணக்கச் செய்யும் கீரின் பிரியாணி! சூப்பரான ரெசிபி
பொதுவாக காலையில் எழுந்தவுடன் தோசை, சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளை தான் அதிகம் எடுத்து கொள்வோம்.
ஆனால் சில வீடுகளில் காலையில் எழுந்தவுடன் சாதம் மற்றும் சாதத்துடன் தொடர்புப்பட்ட உணவுகள் தான் அதிகம் இருக்கும்.
இவற்றை சாப்பிடும் போது காலை நிறை உணவு என்றால் அது சாதம் தான் என்பார்கள்.
இவ்வாறு சாதம் விரும்பகளுக்கு ஏற்ப லஞ்ச் பாக்ஸ் ரெசிபியில் கிரீன் பிரியாணி எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - ஒரு பவுல்
கொத்தமல்லி, புதினா - தலா ஒரு பவுல்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் உருளை கிழங்கை சுத்தம் செய்து அதனை தோல் நீக்கி வெட்டி வைத்து கொள்ளவும். பின்னர் தக்காளி, வெங்காயம் ஆகிய காய்கறிகளை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து தேவையானளவு அரிசியை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். 10 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது சூடானதும், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வதக்கிய கலவை எடுத்து மிக்ஸியில் போட்டு பசைப்பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
இதன் பின்னர், குக்கரில் நெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், உப்பு மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
வதங்கி நன்றாக வாசம் வரும் போது அதில் நாம் அரைத்து வைத்த புதினா கலவை, அரிசி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்த்து ஒரு வீசில் வைத்து இறக்கினால் சுவையான கிரீன் பிரியாணி ரெடி!